தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு தீர்ப்பு: ‘5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் ஏற்கக்கூடாது’ - ஒவைசி பேட்டி + "||" + Ayodhya case verdict: Muslims should not accept 5 acres of land - Ovaisi interview

அயோத்தி வழக்கு தீர்ப்பு: ‘5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் ஏற்கக்கூடாது’ - ஒவைசி பேட்டி

அயோத்தி வழக்கு தீர்ப்பு: ‘5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் ஏற்கக்கூடாது’ - ஒவைசி பேட்டி
அயோத்தி வழக்கு தீர்ப்பில் வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் ஏற்கக்கூடாது என ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,

அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து அனைத்திந்திய மஸ்ஜிதே இதிஹாதுல் முஸ்லிம் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு நீதித்துறையில் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அது தவறு இழைக்காது என கூற முடியாது. அரசியல் சட்டத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம். பாபர் மசூதி கட்டுவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி அளிக்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் ஏற்கக்கூடாது.


அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் தனது போலி நிறத்தை விடுத்து உண்மையான நிறத்தை வெளிப்படுத்தி உள்ளது. பாபர் மசூதியின் கதவை ராஜீவ்காந்தி திறந்து விடாவிட்டால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும். நரசிம்மராவ் தனது பணியை சரிவர செய்திருந்தால் பாபர் மசூதி இருந்திருக்கும்”. இவ்வாறு ஒவைசி கூறினார்.