அபாய நிலையில் காற்று மாசுபாடு: டெல்லியில் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை
அபாய நிலையில் காற்று மாசுபாடு காரணமாக, டெல்லியில் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது மிகவும் அபாயகரமான நிலையில் காற்று மாசுபட்டு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. எனவே மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிப்பதாக துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா நேற்று அறிவித்தார்.
இதைப்போல டெல்லியில் கல் குவாரிகளின் இயக்கத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நாளை வரை தடை விதித்து இருந்தது. மேலும் இயற்கை எரிவாயு அல்லாமல், நிலக்கரி போன்ற எரிபொருட்களில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு நாளை வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மாநிலத்தில் கட்டுமான பணிகள் அனைத்துக்கும் கடந்த 4-ந்தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story