தெலுங்கானாவில் மேலும் ஒரு பஸ் ஊழியர் தற்கொலை
தெலுங்கானாவில் மேலும் ஒரு பஸ் ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தை அரசு போக்குவரத்து துறையுடன் இணைக்க வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த மாதம் 3-ந் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
வேலைநிறுத்தம் நீடித்து வருவதால், அதிருப்தியில் ஏற்கனவே சில பஸ் ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், மெகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஏ.நரேஷ் (வயது 45) என்ற பஸ் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பஸ் டெப்போவுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Related Tags :
Next Story