ஆம்ஆத்மி கட்சியின் நிதி ஒரே ஆண்டில் ரூ.10 கோடியாக உயர்வு


ஆம்ஆத்மி கட்சியின் நிதி ஒரே ஆண்டில் ரூ.10 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 16 Nov 2019 1:31 AM IST (Updated: 16 Nov 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஆம்ஆத்மி கட்சியின் நிதி ஒரே ஆண்டில் ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தேர்தல் கமிஷனுக்கு கட்சியின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்வது வழக்கம். இந்த வருடத்திற்கான கணக்குளை ஆம்ஆத்மி கட்சி தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளது. நன்கொடைகள், இதர நிதிகள் மூலம் 2017-18-ம் ஆண்டு கட்சியின் நிதி வரவு ரூ.6 கோடியே 6 லட்சமாக இருந்துள்ளது. அந்த தொகை 2018-19-ம் ஆண்டு ரூ.10 கோடியே 11 லட்சமாக உயர்ந்துள்ளது.

நன்கொடையின் மூலம் கிடைத்த வரவு ரூ.10 கோடியே 61 லட்சத்தில் இருந்து இரு மடங்காக உயர்ந்து ரூ.19 கோடியே 31 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

2017-18-ம் ஆண்டு கட்சியின் தேர்தல் செலவாக ரூ.33 லட்சத்து 21 ஆயிரமாக இருந்த தொகை இந்த ஆண்டு (2018-2019) ரூ.4 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது.

மேலும், ஆம்ஆத்மி கட்சிக்கு வங்கி சேமிப்பு கணக்கு, வைப்புத்தொகை கணக்கு ஆகியவற்றின் மூலம் இருப்புத்தொகை ரூ.3 கோடியே 85 லட்சத்திலிருந்து ரூ.7 கோடியே 94 லட்சமாக உயர்ந்துள்ளது.

Next Story