சென்ஷேசனல் நியூஸ் என்றாலே அது சென்ஸ்லெஸ் நியூசாகத்தான் உள்ளது - வெங்கைய நாயுடு வேதனை
சென்ஷேசனல் நியூஸ் என்றாலே அது சென்ஸ்லெஸ் நியூசாகத்தான் உள்ளது துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி
இந்திய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
சென்ஷேசனல் நியூஸ்" (பரபரப்பு செய்தி) என்றாலே அது சென்ஸ்லெஸ் நியூஸ் (புத்தி இல்லாத ) ஆக தான் உள்ளது. வணிக குழுக்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக டிவி சேனல்கள் மற்றும் செய்திதாள்களை தொடங்குகின்றனர். இதனால் பத்திரிக்கைகளின் நன்மதிப்பு அரிக்கப்பட்டு வருகிறது.
நீங்கள் என்னிடம் கேட்கலாம், அரசியல் கட்சிகளுக்கு செய்தித்தாள் தொடங்க உரிமை இல்லையா?என்று ஆம் உரிமை உள்ளது. ஆனால் அதைக் குறிப்பிட வேண்டும், இது அரசியல் கட்சியின் செய்தித்தாள் என்று
கடந்த காலங்களில் செய்திகள் என்பது செய்திகளை சொல்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அது செய்திக்கு புதிய விளக்கத்தை சொல்வதாகவோ அல்லது தவறான ஒரு விளக்கத்தை சொல்வதாகவோ இருந்ததில்லை. ஆனால் தற்போது செய்திகள் மற்றும் கண்ணோட்டம் திணிக்கப்படுவதாக உள்ளது. அது தான் பிரச்சினையே. பரபரப்புவாதம் என்பது தான் மரபாக இன்றைய நாளில் மாறி உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story