உலகத்திலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் மும்பை நகரத்துக்கு முதலிடம்


உலகத்திலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் மும்பை நகரத்துக்கு முதலிடம்
x
தினத்தந்தி 16 Nov 2019 6:10 PM IST (Updated: 16 Nov 2019 6:10 PM IST)
t-max-icont-min-icon

உலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் மும்பை நகரத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

புதுடெல்லி

உலகத்திலேயே வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்ற  நகரங்களின் பட்டியலில் மும்பை நகரத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேடு பள்ளமான சாலைகள், தேவையற்ற வேகத்தடைகள், அதிகப்படியான டிராபிக் சிக்னல்கள், வாகன நெரிசல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை ஐரோப்பிய கார் பாகங்கள் உற்பத்தி நிறுவனமான மிஸ்டர் ஆட்டோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாகனம் ஓட்ட லாயக்கற்ற நகரங்களில் சர்வதேச அளவில் மும்பை முதலிடத்திலும், பாகிஸ்தானின் கராச்சி 2-ம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது. இதேபோல், வாகனங்களை இயக்க மிகவும் வசதியான சொகுசான நகரங்களின் பட்டியலில் கனடா நாட்டின் கல்காரி நகரம் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் துபாய் நகரமும், மூன்றாம் இடத்தில் கனடாவின் ஒட்டாவா நகரமும் உள்ளது. மொத்தம் 15 அம்சங்களைக் கணக்கில் வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் எரிபொருள் செலவு, சாலை வரி, அரசு செய்யும் மேம்பாடுகள் ஆகியனவும் கணக்கில்  எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

வாகனம் ஓட்டுவதற்கான உலகின் மிக மோசமான 10 நகரங்கள் பின்வருமாறு:

மும்பை (இந்தியா), உலான்பாதர் (மங்கோலியா), கொல்கத்தா (இந்தியா), லாகோஸ் (நைஜீரியா), கராச்சி (பாகிஸ்தான்), பொகோட்டா (கொலம்பியா), சாவ் பாலோ (பிரேசில்), மெக்சிகோ நகரம் (மெக்சிகோ), ரியோ டி ஜெனிரோ (பிரேசில்), மாஸ்கோ (ரஷ்யா).

வாகனம் ஓட்ட உலகின் சிறந்த 10 சிறந்த நகரங்கள் பின்வருமாறு:

கல்கரி (கனடா), துபாய் (யுஏஇ), ஒட்டாவா (கனடா), பெர்ன் (சுவிட்சர்லாந்து), எல் பாசோ (அமெரிக்கா), வான்கூவர் (கனடா), கோதன்பர்க் (சுவீடன்), டசெல்டோர்ஃப் (ஜெர்மனி), பாஸல் (சுவிட்சர்லாந்து), டார்ட்மண்ட் (ஜெர்மனி) .

Next Story