காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்துக்கு வருமான வரி விலக்கை ரத்து செய்தது சரியே - தீர்ப்பாயம் உத்தரவு
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்துக்கு வருமான வரி விலக்கை ரத்து செய்தது சரியே என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரசாரின் கட்டுப்பாட்டில் உள்ள ‘யங் இந்தியன்’ நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த வருமானவரி விலக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். யங் இந்தியன் நிறுவனம் ஒரு அறக்கட்டளை என அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை மேற்படி தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வு விசாரித்தது. இதன் முடிவில் யங் இந்தியன் நிறுவனத்துக்கு வருமானவரி விலக்கை ரத்து செய்தது சரியே என தீர்ப்பாயம் நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. யங் இந்தியன் நிறுவனத்தை அறக்கட்டளையாக கருத முடியாது என தீர்ப்பாயம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இந்த உத்தரவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசை அந்த கட்சி குறை கூறியுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘யங் இந்தியன் ஒரு லாப நோக்கு இல்லாத நிறுவனம் என்பது வெளிப்படையானது. இந்த உண்மையை மோடியோ, அவரது ஆதரவாளர்களோ மாற்ற முடியாது’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story