கோவா போலீஸ் டி.ஜி.பி. திடீர் மரணம்


கோவா போலீஸ் டி.ஜி.பி. திடீர் மரணம்
x
தினத்தந்தி 17 Nov 2019 1:48 AM IST (Updated: 17 Nov 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

கோவா போலீஸ் டி.ஜி.பி. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

பனாஜி,

கோவா மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் பிரணாப் நந்தா (வயது 57). இவர் பணி நிமித்தமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்பை போலீஸ் ஐ.ஜி. ஜஸ்பால் சிங் உறுதி செய்தார்.

1988-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான நந்தா கடந்த பிப்ரவரி 25-ந்தேதிதான் கோவாவுக்கு பணி மாறுதலாகி சென்றிருந்தார். அவரது மரணத்துக்கு கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், எதிர்க்கட்சி தலைவர் திகம்பர் காமத் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.



Next Story