லாரியுடன் மோதி சொகுசு பஸ் தீப்பிடித்தது: 12 பேர் உடல் கருகி சாவு
ராஜஸ்தான் மாநிலத்தில் லாரியுடன் மோதி சொகுசு பஸ் தீப்பிடித்ததில் 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம், பிகானிர் மாவட்டத்தில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூருக்கு சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை 7 மணி அளவில் ஜான்ஜீயு என்ற கிராமத்தின் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரியும், பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. உள்ளே இருந்த பயணிகள் அலறி துடித்தனர். இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், கிராம மக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 17 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Related Tags :
Next Story