பன்முக தன்மை - கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிப்பதாக மாநிலங்களவை உள்ளது - பிரதமர் மோடி


பன்முக தன்மை - கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிப்பதாக மாநிலங்களவை உள்ளது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 18 Nov 2019 3:28 PM IST (Updated: 18 Nov 2019 3:28 PM IST)
t-max-icont-min-icon

பன்முக தன்மை - கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளிப்பதாக மாநிலங்களவை உள்ளது என 250-வது மாநிலங்களவை கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மேலும் 3 எம்.பி.க்கள் பதவி ஏற்று கொண்டனர்.

250-வது மாநிலங்களவை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் பேசுவது பெருமையாக உள்ளது. மாநிலங்களவை பல வரலாற்று தருணங்களைக் கண்டு உள்ளது. இது வரலாற்றையும் உருவாக்கியுள்ளது. மேலும், வரலாறு உருவாக்கப்படுவதையும் கண்டு உள்ளது. இது ஒரு தொலைநோக்கான அவையாகும். பன்முகத் தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது.

தேர்தல் அரசியலில் இருந்து விலகி மக்களுக்கு, நாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்க மாநிலங்களவை ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

டிரிபிள் தலாக் மசோதா இங்கு நிறைவேற்றப்படாது என்று பரவலாக நம்பப்பட்டது, ஆனால் நிறைவேற்றப்பட்டது. இந்த அவையில்  ஜி.எஸ்.டி. கூட நிறைவேற்றப்பட்டது.

370 மற்றும் 35 (ஏ)  சட்டப்பிரிவு தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது மாநிலங்களவையின் பங்கை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

2003 ஆம் ஆண்டில், மாநிலங்களவை இரண்டாவது  அவையாக இருக்கலாம், ஆனால் அதை இரண்டாம் நிலை அவை  என்று அழைக்கக்கூடாது என்று அடல்பிகாரி வாஜ்பாய் ஜி குறிப்பிட்டிருந்தார். இன்று, நான் அடல் ஜியின் எண்ணங்களுடன் உடன்படுகிறேன். மேலும் தேசிய அபிவிருத்திக்கு மாநிலங்களவை ஒரு  ஆதரவான அவையாக  இருக்க வேண்டும்

நான் இன்று, தேசியவாத காங்கிரஸ்  மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளை பாராட்ட விரும்புகிறேன். இந்த கட்சிகள் பாராளுமன்ற விதிமுறைகளை கடைபிடித்துள்ளன. அவர்கள் ஒருபோதும் கீழே இறங்கியது இல்லை. அவர்கள் தங்கள் புள்ளிகளை மிகவும் திறம்பட உயர்த்தியுள்ளனர். பாரதீய ஜனதா உள்ளிட்ட பிற கட்சிகள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என கூறினார்.

Next Story