ஒரு மணி நேரத்திற்கு 15 இந்தியர்கள் தற்கொலை
ஒரு மணி நேரத்திற்கு 15 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
புதுடெல்லி
2016 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டு உள்ள தகவலில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு இந்தியர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று கூறப்பட்டு உள்ளது. தற்கொலை தூண்டுதல்கள் பாலினங்களில் வேறுபடுகின்றன. குடும்பக் கஷ்டங்களும், நோய்களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முக்கிய காரணங்களாக இருந்தன.
2016 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த ஆண்டில் மொத்தம் 131,008 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இது 2015 ஆம் ஆண்டில் 133,623 தற்கொலை மரணங்களிலிருந்து 2 சதவீதம் குறைந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக, பெண்களை விட அதிகமாக ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். (தற்கொலைகளில் 68 சதவீதம் ஆண்கள்).
Related Tags :
Next Story