வருமானவரித்துறை சோதனையில் பணக்கட்டுக்களை சாலையில் வீசி எறிந்த ஊழியர்கள்


வருமானவரித்துறை சோதனையில் பணக்கட்டுக்களை சாலையில் வீசி எறிந்த ஊழியர்கள்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:23 AM IST (Updated: 21 Nov 2019 10:23 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவில் வருமானவரித்துறை சோதனையில் பணக்கட்டுக்களை சாலையில் வீசி எறிந்த ஊழியர்கள்.

கொல்கத்தா

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற  தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளை 6வது மாடியில் இருந்து வீசியெறிந்தனர். கட்டுக் கட்டாகவும், கொத்துக் கொத்தாகவும் வந்து விழுந்த பணத்தைக் கண்ட பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர். ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

Next Story