சமோசா மற்றும் ஜுஸ் போன்றவற்றை மனிதர்களிடம் இருந்து பறித்து குரங்குகள் சாப்பிடுகின்றன - ஹேமமாலினி புகார்
பழங்களுக்கு பதிலாக மனிதர்களிடம் இருந்து சமோசா மற்றும் ஜுஸ் போன்றவற்றை பறித்து குரங்குகள் சாப்பிடுகின்றன என்று மக்களவையில் ஹேமமாலினி புகார் அளித்தார்.
புதுடெல்லி,
மதுரா தொகுதியின் பாஜக எம்.பி. நடிகை ஹேமமாலினி இன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் கூறும்போது,
எனது தொகுதியான மதுராவிற்கு வரும் பக்தர்களின் பொருட்களை குரங்குகள் பறித்து தொல்லைக்கொடுக்கின்றன. இதற்காக அரசு குரங்குகளுக்கான வனப்பகுதியை உருவாக்க வேண்டும்.
மேலும் மாறிய உணவுப்பழக்கத்தால் குரங்குகளுக்கு ஒருவித நோய் பரவுகிறது. பழங்களுக்கு பதிலாக, மனிதர்களிடம் இருந்து சமோசா மற்றும் ஜுஸ் போன்றவற்றை பறித்து குரங்குகள் சாப்பிடுகின்றன என்றார்.
இதை தொடர்ந்து மக்களவையில், மற்ற உறுப்பினர்களும் டெல்லியிலும் குரங்குகள் தொல்லை அளிப்பதாகப் புகார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story