குஜராத்தில் நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது
பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. நித்யானந்தாவின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், ஆசிரமத்தில் இருந்த சிலர் காணாமல் போனதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், ஆசிரமத்தை 3 மாதத்திற்குள் மூடக்கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பல்வேறு புகார்களை அடுத்து மாவட்ட நிர்வாகத்தால் நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது. அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டனர்.
Related Tags :
Next Story