குரங்குகளை விரட்ட நாய்க்கு புலி வேஷமிட்ட பலே விவசாயி


குரங்குகளை விரட்ட நாய்க்கு புலி வேஷமிட்ட பலே விவசாயி
x
தினத்தந்தி 3 Dec 2019 12:32 PM IST (Updated: 3 Dec 2019 12:32 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை விரட்டுவதற்கு தனது வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் புலி வேஷமிட்டு அச்சுறுத்தியுள்ளார்.

சிவமொக்கா,

கர்நாடகாவின் தீர்த்தஹள்ளி நகரில் நல்லூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார்.  இவரது விவசாய நிலத்தில் விளைந்து வரும் பயிர் பொருட்களை வனப்பகுதியில் இருந்து குரங்குகள் வந்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன.

இதனால் நஷ்டமடைந்து வருத்தத்தில் இருந்த விவசாயிக்கு புதிய யோசனை கிடைத்தது.  இதுபற்றி அவரது மகள் கூறும்பொழுது, தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை விரட்டுவதற்கு எங்களது வளர்ப்பு நாய் மீது கோடுகளை வரைந்து புலி போன்ற தோற்றம் ஏற்படுத்தினார்.

குரங்குகளை அச்சமூட்டி விரட்டுவதற்கு எனது தந்தை இந்த யோசனையை பயன்படுத்தினார்.  எங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரது யோசனையை பயன்படுத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.

Next Story