சட்டசபையில், கையை அறுத்து எதிர்ப்பை தெரிவித்த ‘எம்.எல்.ஏ.’


சட்டசபையில், கையை அறுத்து எதிர்ப்பை தெரிவித்த ‘எம்.எல்.ஏ.’
x
தினத்தந்தி 5 Dec 2019 1:47 AM IST (Updated: 5 Dec 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில், கையை அறுத்து ‘எம்.எல்.ஏ.’ ஒருவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில், மூடப்பட்ட தொழிற்சாலைகள் சிலவற்றை விற்பனை செய்ய அரசு முடிவு செய்து இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ரூப் ஜோதி குர்மி, அசாம் சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின்போது திடீரென அதிர்ச்சி அளிக்கும் வகையில், தனது உள்ளங்கையை ‘பிளேடால் அறுத்து, அதில் இருந்து கொட்டிய ரத்தத்தால் அரசின் முடிவுக்கு எதிரான கோஷத்தை எழுதி தனது எதிர்ப்பை தெரிவித்தார். அவரது இந்த நடவடிக்கையை சபாநாயகர் கண்டித்ததுடன் எழுத்து பூர்வமாக வருத்தம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தனது போராட்டம் குறித்து குர்மி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சபையில் அவர் வாசித்த மன்னிப்பு கடிதத்தில், “தனது கோரிக்கை நியாயம் என்றாலும் அதை வெளிப்படுத்திய விதம் சரியான வழிமுறை அல்ல” என்று, குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக, முதல் நாளில் கையை ‘பிளேடால்’ அறுத்துக்கொண்ட ரூப் ஜோதி குர்மி, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கையில் மூன்று தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story