ஐ.கே.குஜ்ராலின் பேச்சை கேட்டிருந்தால் சீக்கியர்கள் படுகொலை சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் - மன்மோகன் சிங்


ஐ.கே.குஜ்ராலின் பேச்சை கேட்டிருந்தால் சீக்கியர்கள் படுகொலை சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் - மன்மோகன் சிங்
x
தினத்தந்தி 5 Dec 2019 12:26 PM IST (Updated: 5 Dec 2019 12:26 PM IST)
t-max-icont-min-icon

ஐ.கே.குஜ்ராலின் பேச்சை கேட்டிருந்தால் 1984ல் நடந்த சீக்கியர்கள் படுகொலை சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் 100-வது பிறந்த நாள் விழா நேற்று டெல்லியில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்த போது அப்போதைய உள்துறை மந்திரியான நரசிம்ம ராவை, ஐ.கே.குஜ்ரால் சந்தித்தார். 

அப்போது ஐ.கே.குஜ்ரால் , தற்போது நிலைமை மோசமாக உள்ளது. விரைவாக ராணுவத்தை அழைக்க வேண்டியது கட்டாயம் என அறிவுரை கூறினார். அந்த அறிவுரை ஏற்கப்பட்டிருந்தால் 1984-ல் நடந்த படுகொலை சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் என்று மன்மோகன் சிங் கூறினார்.

ஐ.கே.குஜ்ரால் கடந்த 1997-98  வரை பிரதமராக பதவி வகித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு 92 வயதில் அவர் காலமானார்.

Next Story