ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை: மீட்கும் பணி தீவிரம்


ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை: மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 Dec 2019 5:53 PM IST (Updated: 5 Dec 2019 5:53 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போபால்,

ராஜஸ்தான் மாநிலம்  ஷிரோஹி மாவட்டத்தில் 5 வயது குழந்தை தனது வீட்டிற்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் இது குறித்து தீ அணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த  மீட்பு படை குழுவினர்  15 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட கலெக்டர் சுரேந்திர குமார் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

Next Story