டெல்லியில் தீ விபத்து 43 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்


டெல்லியில் தீ விபத்து 43 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 8 Dec 2019 10:58 AM IST (Updated: 8 Dec 2019 10:58 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்றன.  அதிகாலை வேளையில் நடந்த இந்த தீ விபத்தில் சிக்கி  43 பேர் உயிரிழந்ததனர்.

இந்நிலையில், டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

ராணி ஜான்சி சாலையில் உள்ள டெல்லி அனுஜ் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து கொடூரமானது. உயிரிழந்தோர் குடும்பத்தினரின் நினைவாக எனது மனம் உள்ளது.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story