சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் வெங்காய விளைச்சல் குறைந்துள்ளதால் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துவருகிறது. வெங்காயம் பதுக்கலை தடுக்க மத்திய அரசு கடந்த வாரம் சில்லரை வியாபாரிகள் 5 டன் (முன்பு 10 டன்) வெங்காயமும், மொத்த வியாபாரிகள் 25 டன் (முன்பு 50 டன்) வெங்காயமும் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்பின்னரும் வெங்காயம் விலை குறையவில்லை.
இதைத்தொடர்ந்து மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம், சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மாநில அரசுகள் வெங்காயம் பதுக்கலை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story