மக்களவையில் ஆதரித்து வாக்களிப்பு: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மாநிலங்களவையில் சிவசேனா எதிர்க்கும் - உத்தவ் தாக்கரே பேட்டி
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்து வாக்களித்த சிவசேனா மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்க்கும் என அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் காரசார விவாதத்திற்கு பிறகு, 311 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் ஆதரவாக வாக்களித்தது.
மராட்டிய தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்-மந்திரி பதவி பகிர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாரதீய ஜனதா உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த சிவசேனா, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடியுரிமை பெறும் அகதிகள் எங்கு, எந்த மாநிலத்தில் தங்குவார்கள்? இதை எல்லாம் தெளிவுபடுத்த வேண்டும் என குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக நாங்கள் சில கேள்விகளை எழுப்பி உள்ளோம்.
அதற்கு விளக்கம் தராத பட்சத்தில் மாநிலங்களைவில் இந்த மசோதாவை சிவசேனா ஆதரிக்காது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் எழுப்பப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.
மசோதாவை நிறைவேற்றுவதை விட நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பிரச்சினை, முக்கியமாக வெங்காயம் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை பற்றி மோடி அரசாங்கம் கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story