உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டில் திமுக கூட்டணி தொடர்ந்த வழக்கு சற்று நேரத்தில் விசாரணை
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறி திமுக கூட்டணி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சற்று நேரத்தில் விசாரணை தொடங்கவுள்ளது.
புதுடெல்லி
பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னர் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி கரூரை சேர்ந்த வாக்காளர் முருகேசன் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இதேபோன்று உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story