2 கடைகளில் வெங்காயத்தை திருடிய 2 பேர் கைது
மும்பையில் 2 கடைகளில் இருந்து 168 கிலோ வெங்காயத்தை திருடிய 2 பேர், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
மும்பை
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், அதை திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. மும்பையின் டோங்க்ரி பகுதியிலுள்ள 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 21,160 ரூபாய் மதிப்பிலான வெங்காயங்கள் கடந்த 5ம் தேதி நள்ளிரவு திருட்டுப் போயின.
இதுகுறித்த புகாரின்பேரில், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் இருட்டில் ரகசியமாக வந்து வெங்காய மூட்டைகளை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனடிப்படையில், விசாரணை நடத்தி அந்த 2 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story