பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு 10 ஆயிரம் அமெரிக்க தாக்குதல் துப்பாக்கிகளை வாங்கிய இந்தியா
ரூ.700 கோடிக்கு 72 ஆயிரம் அமெரிக்க தயாரிப்பு தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா ஒப்பந்தம் செய்து உள்ளது.
புதுடெல்லி
ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லைகட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, இந்திய ராணுவம் அமெரிக்க தாக்குதல் துப்பாக்கிகளைப் வாங்க உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக முதல கட்டமாக 10,000 ரிக் சிக் சாவர் தாக்குதல் துப்பாக்கிகளை இந்திய ராணுவம் வாங்கி உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊடுருவல்களை சமாளிக்க இந்திய இராணுவத்திற்கு இந்த தாக்குதல் துப்பாக்கிகள் பலமாக இருக்கும்.
இதற்காக இந்தியா 72 ,400 துப்பாக்கிகளுக்கு ஆர்டர்களை வழங்கி உள்ளது. துப்பாக்கிகள் இந்தியா வந்து வடக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா அமெரிக்காவுடன் ரூ.700 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்துள்ளது.
புதிய துப்பாக்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் இந்தியா வந்து சேரும். விரைவு கொள்முதல் கீழ் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story