வெங்காயம் மட்டுமல்ல 20 க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்களின் விலை உயர்வு மத்திய அரசு ஒப்புதல்


வெங்காயம் மட்டுமல்ல 20 க்கும் மேற்பட்ட  உணவுப் பொருள்களின் விலை உயர்வு மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 11 Dec 2019 4:07 PM IST (Updated: 11 Dec 2019 4:07 PM IST)
t-max-icont-min-icon

வெங்காயம் மட்டுமின்றி 20 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையும் கடந்த ஓராண்டாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு கூறி உள்ளது.

புதுடெல்லி

வெங்காயத்தின் விலை இறக்கை கட்டி பறக்கும் நிலையில், அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு, எண்ணெய்,தேயிலை, சர்க்கரை பால், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் படிப்படியாக உயர்ந்துள்ளதாக. மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மக்களவையில் தெரிவித்துள்ளார். 

விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறியுள்ள அவர், நிலைமை அடுத்த நிதியாண்டில் இயல்புக்கு திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ராகுல் ரமேஷ் ஷெவாலே மற்றும் பார்த்ருஹரி மஹ்தாப் உறுப்பினர்களின் கேள்விக்கு  பதிலளித்து  மாநிலங்களவையில் பேசிய   மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்,

தேவை மற்றும்  பாதகமான வானிலை, பருவநிலை காரணமாக உற்பத்தியில் பற்றாக்குறை, அதிகரித்த போக்குவரத்து செலவுகள், சேமிப்பு வசதிகள் இல்லாதது,  பதுக்கல் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்தல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட செயற்கை பற்றாக்குறையால் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து உள்ளன என கூறினார்.

வெங்காயத்தின் விலை கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு 400 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், இதர உணவுப் பொருள்களின் விலையும் உயர்ந்திருப்பது பணவீக்கம் உயர காரணம் என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

Next Story