பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி டுவீட்


பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும்  -  பிரதமர் மோடி டுவீட்
x
தினத்தந்தி 11 Dec 2019 4:16 PM IST (Updated: 11 Dec 2019 4:16 PM IST)
t-max-icont-min-icon

பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மகாகவி  பாரதியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர்,

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.  அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Next Story