குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் - வைகோ விமர்சனம்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மாநிலங்களவையில் வைகோ பேசியதாவது:-
மதத்தை அடிப்படையாக வைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது. மத்திய அரசு வேண்டுமென்றே இலங்கை தமிழர்களை புறக்கணித்துள்ளது.
இந்த சட்டம் சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும்.
அனைத்து நம்பிக்கைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் சுதந்திர போராட்டத்தின் அடிப்படையே என்றார்.
Related Tags :
Next Story