குடியுரிமை சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது!


குடியுரிமை சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது!
x
தினத்தந்தி 11 Dec 2019 9:30 PM IST (Updated: 11 Dec 2019 9:30 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தநிலையில்  இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே  மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

125 உறுப்பினர்கள் ஆதரவுடன்  மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. 105 எம்.பி.,க்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தனர்.  குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். 

மக்களவையில்  இந்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த சிவசேனா,  மாநிலங்களவையில் இந்த மசோதா மீது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.

Next Story