”துணிச்சலான நடவடிக்கை” குடியுரிமை மசோதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு


”துணிச்சலான நடவடிக்கை” குடியுரிமை மசோதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு
x
தினத்தந்தி 12 Dec 2019 2:01 PM IST (Updated: 12 Dec 2019 2:01 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது துணிச்சலான நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமைத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை திருத்த சட்டம் மசோதா  வழி வகை செய்கிறது. 

ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும்.  குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

குடியுரிமை திருத்த மசோதா துணிச்சலான நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story