கைது செய்யப்பட்ட இந்தி நடிகைக்கு ஜாமீன் மறுப்பு - நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

நேரு குடும்பம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட இந்தி நடிகைக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
கோட்டா,
குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த இந்தி நடிகை பாயல் ரோகத்கி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குடும்பத்தை பற்றி தனது சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் பாயல் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நேற்று ராஜஸ்தானின் பண்டியில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். மேலும் வருகிற 24-ந்தேதி வரை பாயலை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி பாயல் ரோகத்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த தகவலை அவரது வக்கீல் பூபேந்திர சகாய் சக்சேனா உறுதி செய்தார். மேலும் நடிகை பாயலுக்கு ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Tags :
Next Story