டெல்லியில் தடியடி, கண்ணீர் புகைகுண்டு: போலீசாரின் அத்துமீறல் குறித்து நீதி விசாரணை - எதிர்க்கட்சிகள் கோரிக்கை


டெல்லியில் தடியடி, கண்ணீர் புகைகுண்டு: போலீசாரின் அத்துமீறல் குறித்து நீதி விசாரணை - எதிர்க்கட்சிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2019 9:30 PM GMT (Updated: 16 Dec 2019 9:02 PM GMT)

டெல்லியில் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடத்திய, போலீசாரின் அத்துமீறல் குறித்து நீதி விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுவீச்சு நடைபெற்றது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத் கூறும்போது, “டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறலுக்கு மத்திய அரசே பொறுப்பு. தூண்டிவிடுவதாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்றது. இதுதொடர்பாக ஜனாதிபதியையும் சந்திக்க உள்ளோம்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “ஜனநாயகத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். ஆசாத், யெச்சூரி மற்றும் லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவ் ஆகியோர் போலீசாரின் அத்துமீறல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story