குடியுரிமை திருத்த சட்டம்: குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் பெண்கள் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டம்: குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2020 11:59 AM IST (Updated: 1 Jan 2020 11:59 AM IST)
t-max-icont-min-icon

குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்தாண்டு பிறந்த போது தேசிய கீதம் பாடினர்.

புதுடெல்லி,

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்க, தலைநகர் டெல்லியில்  கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல்  குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கு பெற்றனர். 

தெற்கு டெல்லி சஹீன் பாக் பகுதியில் நடக்கும் இந்த போராட்டங்களை பெண்களே முன்னெடுத்துச் செல்கின்றனர். 18-வது நாளாக அங்குப் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. பெண்கள் இரவு பகலாகப் போராட்ட களத்தில் இருக்கின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவுகளை வழங்கி வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர்.

Next Story