இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் - புதிய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே


இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் - புதிய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே
x
தினத்தந்தி 1 Jan 2020 1:58 PM IST (Updated: 1 Jan 2020 1:58 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இனிமேல், இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் என்று ராணுவ தளபதி எம்.எம். நரவானே தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லி,

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் எம்.எம். நரவானே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய ராணுவத்தின் 28வது தளபதியாக பொறுப்பேற்ற எம்.எம். நரவானே, டெல்லி இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு  பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

"சீன எல்லையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த விதமான சூழலிலும் நாட்டை காக்கும் பணியில் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பதே தமது திட்டம்.

தமது பதவிக்காலத்தில் ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க ராணுவம் அறிவுறுத்தப்படும்.  பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இனிமேல், இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும்" என கூறினார்.

Next Story