எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்; இந்திய ராணுவம் தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண காதி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில், போர் நிறுத்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
நேற்று இரவு 9 மணியளவில், சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டை இரவு 11 மணியளவில் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story