ஏர் இந்தியா விமானங்கள் ஊழல் விவகாரம்: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை


ஏர் இந்தியா விமானங்கள் ஊழல் விவகாரம்: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை
x
தினத்தந்தி 3 Jan 2020 7:31 PM IST (Updated: 3 Jan 2020 7:31 PM IST)
t-max-icont-min-icon

ஏர் இந்தியா விமானங்கள் ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று 6 மணி நேரம் விசாரணை நடத்தியது.

புதுடெல்லி,

ஏர்செல் - மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ்., மீடியா ஆகிய நிறுவனங்கள் அன்னிய முதலீடு செய்ய அனுமதி அளித்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வெளியே இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், ஏர் இந்தியா விமானங்கள் ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கிலும் சிக்கி உள்ளார். 

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இதுகுறித்து பிரபுல் பட்டேலிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்ற நிலையில், அப்போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த முடிவு செய்தது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை ப.சிதம்பரத்துக்கு சம்மன் அளித்த நிலையில், அமலாக்கத்துறை முன்  இன்று அவர் ஆஜரானார். 

ஏர் இந்தியா விமானங்கள் ஊழல் விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை சுமார்  6 மணி நேரம் விசாரணை நடத்தியது.

Next Story