‘திஷா’ சட்டத்தை அமல்படுத்த 2 பெண் அதிகாரிகள் நியமனம் - ஆந்திர அரசு அறிவிப்பு
‘திஷா’ சட்டத்தை அமல்படுத்த 2 பெண் அதிகாரிகளை ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் அம்மாநில அரசு, சட்டசபையில்2 புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
இதன்படி பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தண்டனை விதிக்க வகை செய்யும் ‘திஷா’ சட்டம் ஆந்திர மாநில சட்டசபையில் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி நிறைவேறியது. இந்த சட்டம், பாலியல் வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்கவும், 21 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கவும் வகை செய்கிறது.
இதனை தொடர்ந்து இந்த சட்டத்தை அமல்படுத்த, டாக்டர் கிருத்திகா சுக்லா ஐ.ஏ.எஸ். மற்றும் எம். தீபிகா ஐ.பி.எஸ். ஆகியோரை ‘திஷா’ சிறப்பு அதிகாரிகளாக ஆந்திர அரசு நியமித்துள்ளது.
Related Tags :
Next Story