இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துபவா்களுக்கு வாக்களிக்க வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்
இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துபவா்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் அரசு பள்ளிகளில் நடைபெற்ற பெற்றோா் ஆசிரியா் சந்திப்பைப் பாா்வையிட, ரோஸ் அவெனியூவில் உள்ள சர்வோதய பால் வித்யாலயாவுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெர்ஜிவால் சென்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கல்வியை வைத்து வாக்காளர்களைக் கவர நான் முயல்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. உண்மையில், அரசியலின் முக்கிய அங்கமாக கல்வி இருக்க வேண்டும். டெல்லி அரசு பள்ளிகளில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, பாா்சி இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்று வருகிறாா்கள்.
இவா்களுக்கு எவ்வித வேறுபாடும் இல்லாமல் தரமான கல்வியை வழங்கி வருகிறோம். சிறந்த கல்வியை வழங்குபவா்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.
மாறாக, நாட்டில் இந்து, முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துபவா்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததில் இருந்து ஆண்டுதோறும் பெற்றோா் ஆசிரியா் சந்திப்புகளை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story