‘பெல்’ நிறுவனத்தின் பங்குகள் விற்பனை; மத்திய மந்திரிசபை ஒப்புதல்


‘பெல்’ நிறுவனத்தின் பங்குகள் விற்பனை; மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 9 Jan 2020 4:12 AM IST (Updated: 9 Jan 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

‘பெல்’ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், ‘பெல்’ நிறுவனம், கனிமங்கள் மற்றும் உலோகங்கள் வாணிப கழகம் (எம்.எம்.டி.சி.), தேசிய கனிம வள நிறுவனம் (என்.எம்.டி.சி.), பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தகவலை மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர். பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் பணம், சமூக நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சி திட்டங்களுக்கும் பயன்படும் என்றும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர்கள் கூறினர். தமிழ்நாட்டில் திருச்சியில் ‘பெல்’ நிறுவனத்தின் கிளை செயல்படுகிறது.

சுகாதார துறையில், தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைத்தல், தடுப்பூசி உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்புக்காக, மத்திய சுகாதார துறைக்கும், பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையே கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.

Next Story