காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு கட்டுப்பாடுகள் விவகாரம்; நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு


காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு கட்டுப்பாடுகள் விவகாரம்;  நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 8:17 PM IST (Updated: 9 Jan 2020 8:17 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, காஷ்மீரில், மக்கள் நடமாட்டத்துக்கும், தகவல் தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Next Story