குடியுரிமை திருத்த சட்டம்: தவறான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன - ரவிசங்கர் பிரசாத்


குடியுரிமை திருத்த சட்டம்: தவறான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன -  ரவிசங்கர் பிரசாத்
x
தினத்தந்தி 9 Jan 2020 8:51 PM IST (Updated: 9 Jan 2020 8:51 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சென்னையில் கடலுக்கு அடியில் கண்ணாடி இழை வடம் அமைக்கும் பணியினை இன்று துவக்கி வைத்தார். சென்னை அந்தமான் தீவுகளுக்கு இடையே கண்ணாடி இழை வடம் அமைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான கருத்துக்கள் திட்டமிட்டு எதிர்க் கட்சிகளால் பரப்பப்படுகின்றன. பாகிஸ்தானில் இருந்து வந்த 600 முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story