ராணுவம் தயாராக இருக்கிறபோது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ஏன் தாமதிக்க வேண்டும்? - அஜ்மீர் தர்கா தலைவர் கேள்வி


ராணுவம் தயாராக இருக்கிறபோது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ஏன் தாமதிக்க வேண்டும்? - அஜ்மீர் தர்கா தலைவர் கேள்வி
x
தினத்தந்தி 12 Jan 2020 2:22 AM IST (Updated: 12 Jan 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

ராணுவம் தயாராக இருக்கிறபோது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ஏன் தாமதிக்க வேண்டும் என அஜ்மீர் தர்கா தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அஜ்மீர்,

நாடாளுமன்றம் விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார். இதை வரவேற்றுள்ள அஜ்மீர் தர்கா தலைவர் ஜைனுல் ஆப்தீன் அலி கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயாராக இருக்கிறபோது, ஏன் தாமதிக்க வேண்டும்? இதற்காக ராணுவத்துக்கு நாடாளுமன்றம் உத்தரவிட வேண்டும். பாகிஸ்தான் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து அகண்ட காஷ்மீர் கனவை நனவாக்குவதற்கு இதுவே தகுந்த நேரம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story