நாடாளுமன்றத்தில் நடந்த தள்ளுமுள்ளு: சபாநாயகர் வேதனை
நாடாளுமன்றத்தில் நடந்த தள்ளுமுள்ளு குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா வேதனை தெரிவித்தார்.
புதுடெல்லி,
3 தடவை தள்ளி வைப்புக்கு பிறகு, மாலை 4.30 மணிக்கு சபை மீண்டும் கூடியது. அப்போது, ஓம் பிர்லா கூறியதாவது:-
சபையில் கண்ணியம் கடைப்பிடிப்பது அனைவருக்கும் அவசியம். சபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து நான் தனிப்பட்ட முறையில் வேதனை அடைந்துள்ளேன். உங்களுக்கு வேதனை இல்லாமல் இருக்கலாம்.
இத்தகைய சூழ்நிலையில் நான் சபையை நடத்த விரும்பவில்லை. சபையின் கண்ணியத்தை உறுதி செய்வது பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மூத்த உறுப்பினர்கள், சபையை சுமுகமாக நடத்த தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Tags :
Next Story