பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்


FIle Photo
x
FIle Photo
தினத்தந்தி 3 March 2020 9:06 AM IST (Updated: 3 March 2020 9:06 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு  பிரதமர் மோடியை, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க இருப்பது இது முதல் முறையாகும்.  டெல்லி வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கக் கூடும் என்று தெரிகிறது.

முன்னதாக கடந்த வாரம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எனினும் பிரதமர் மோடி, தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சென்றதால், அந்த  நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இருந்த போதிலும், டுவிட்டர் வாயிலாக பிரதமர் மோடி கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். 

Next Story