கொரோனா வைரஸ்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


கொரோனா வைரஸ்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 March 2020 3:24 PM IST (Updated: 3 March 2020 3:24 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசை கண்டு பீதி அடைய தேவையில்லை என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்துள்ள நிலையில், அதன் பாதிப்பு முதல் முறையாக இந்தியாவில் கேரள மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பினர்.

தற்போது டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ள இத்தாலி நாட்டு பயணிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

இந்தநிலையில்  இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை தடுக்க பல்வேறு துறைகளும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் பல்வேறு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கண்டு நாட்டு மக்கள் பீதி அடைய தேவையில்லை என அறிவுறுத்தி உள்ளார்.

இந்த பதிவுடன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து தற்காப்பு தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில்  சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், சவுதி அரேபியா, ஜப்பான், நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்றும்,  இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பானியர்கள் இந்தியா வருவதற்கான விசா வசதி ரத்து செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

டெல்லி சவ்லா பகுதி முகாமில் கண்காணிப்பில் உள்ள 112 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும்,  112 பேருக்கும் எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story