டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு


டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
x
தினத்தந்தி 3 March 2020 6:19 PM IST (Updated: 3 March 2020 6:19 PM IST)
t-max-icont-min-icon

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக சரிந்து வருகிறது.

மும்பை,

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. இன்றைய தினசரி வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் வரை சரிந்தது. கொரோனா வைரஸ் தாக்கம், பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால், புதிய முதலீடு குறையும் அபாயம் உள்ளது. ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 50 காசுகள் வரை சரியும் நிலை உள்ளதாகவும் சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Next Story