என்.பி.ஆர் விவகாரம்: தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு


என்.பி.ஆர் விவகாரம்: தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு
x
தினத்தந்தி 3 March 2020 9:49 PM IST (Updated: 3 March 2020 9:49 PM IST)
t-max-icont-min-icon

என்பிஆர்-ல் திருத்தம் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

என்.பி.ஆரில் உள்ள புதிய விதிமுறைகளை தளர்த்த கோரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில்  தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று  என ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும்  என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) மற்றும் என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) விவகாரம்  குறித்து மத்திய அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ எதுவும் விவாதிக்கப்படவில்லை. தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story