டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 1427 பேர் கைது: 436 வழக்குகள் பதிவு


டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 1427 பேர் கைது: 436 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 3 March 2020 10:38 PM IST (Updated: 3 March 2020 10:52 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 1427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


புதுடெல்லி,

கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும்,  அந்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் கலவரமாக நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது.  மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’ தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

டெல்லி வன்முறை தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 1427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story