டெல்லி வன்முறை; சபாநாயகர் மீது காகிதங்கள் வீச்சு - நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி வன்முறை குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நேற்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை சபாநாயகரை நோக்கி காகிதங்கள் கிழித்து வீசப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லி வன்முறை குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதில் அமளி ஏற்பட்டு நாள் முழுவதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை கூட்டம் நேற்று 2-வது நாளாக காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க் கள் எழுந்து நின்று டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பா.ஜனதா எம்.பி.க் கள் ‘வந்தே மாதரம்’ என்று குரல் எழுப்பினார்கள்.
அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, முதலில் கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்வோம், பின்னர் மதியம் பூஜ்ஜிய நேரத்தில் இந்த பிரச்சினையை எழுப்புங்கள் என்றார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உடனடியாக டெல்லி வன்முறை பிரச்சினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, இந்த பிரச்சினைக்கு இன்னும் அரசு பதில் அளிக்கவில்லை என்றார். மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியும், அமைதியும், இயல்புநிலையும் திரும்ப வேண்டும் என்பதற்கே அரசு முன்னுரிமை கொடுத்துவருகிறது. இந்த பிரச்சினையை பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பலாம், நாங்கள் விவாதத்துக்கு தயார் என்றார்.
ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு உடன்படவில்லை. உடனே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். சிலர் பதாகைகளையும் காட்டி கோஷம் போட்டனர். அப்போது சபாநாயகர், பதாகைகளை அவைக்குள் கொண்டுவர அனுமதி இல்லை என்றார்.
பா.ஜனதா எம்.பி.க்களும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கோஷம் போட்டதால் மீண்டும் அமளி ஏற்பட்டது. அமளிக்கு இடையே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மாநில கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக வங்கி ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை சபாநாயகர் எடுத்தார்.
இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் போட்டனர். அப்போது காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆளுங்கட்சி வரிசையை நோக்கி மையப்பகுதிக்கு சென்றார். அவரை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அவரது இருக்கைக்கு அழைத்துச்செல்ல முயன்றார். எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும், பா.ஜனதா எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சபாநாயகர், தங்கள் எல்லையை மீறி செல்லும் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
அப்போது காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் மக்களவை செயலக அறிக்கைகளை கிழித்தார். அவருடன் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு பின்னர் வருகிற 11-ந் தேதி இந்த பிரச்சினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். அன்று நாள் முழுவதும் விவாதம் நடத்தவும் அரசு தயாராக உள்ளது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஹாஹுவா மொய்த்ரா மேஜையில் இருந்த காகிதங்களை கிழித்து சபாநாயகரை நோக்கி திரும்பத் திரும்ப வீசினார்.
எதிர்க்கட்சிகளின் அமளி குறையாததால் சபாநாயகர் ஓம் பிர்லா, முதலில் 12 மணி வரையும், பின்னர் மதியம் 2 மணி வரையும் கூட்டத்தை ஒத்திவைத்தார். மதியம் கூட்டம் மீண்டும் தொடங்கிய போதும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்தது.
இதனால் முழுவதும் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
மாநிலங்களவையிலும் நேற்று கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு வலியுறுத்தியதால் துணைத்தலைவர், நாள் முழுவதும் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

Related Tags :
Next Story