டெல்லி வன்முறையை மறைக்க கொரோனா வைரஸ் பீதியை கிளப்புகிறார்கள்- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


படம் : PTI
x
படம் : PTI
தினத்தந்தி 4 March 2020 4:49 PM IST (Updated: 4 March 2020 4:49 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி வன்முறையை மறைக்க கொரோனா வைரஸ் பீதியை கிளப்புகிறார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.

கொல்கத்தா

இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ வர்தன் இன்று தெரிவித்தார்.

இந்த நிலையில், டெல்லி வன்முறை சம்பவத்தை திசை திருப்பவே கொரோனா வைரஸ் குறித்த பீதியை மத்திய பா. ஜனதா அரசு கிளப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

மால்டா மாவட்டத்தில் பேரணியில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி   கூறியதாவது:-

இன்று சிலர் கொரோனா, கொரோனா என அதிகமாக கத்திக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பயங்கரமான நோய்தான், ஆனால், அது குறித்து பீதியை கிளப்ப வேண்டாம்.

டெல்லி வன்முறையில் உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. உண்மையான கொரோனா வைரசை ( டெல்லி வன்முறை ) மக்கள் மறக்கச் செய்ய, அவர்கள் டி.வி சேனல்களை பயன்படுத்தி கொரோனா வைரசை சுற்றி ஒரு மிகைப்படுத்தலை உருவாக்குகிறார்கள்.

மேற்கு வங்கத்தில் ஒரு நபர் எலி கடித்தால் அவர்கள் சிபிஐ  விசாரணை  கோருகிறார்கள். இவ்வளவு பேர் கொலை செய்யப்பட்ட பின்னரும் இங்கு நீதி விசாரணை இல்லை. சுப்ரீம் கோர்ட்  நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என கூறினார்.

தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தின் புனியாத்பூரில் நடைபெற்ற பேரணியில் பேசும் போது  கடந்த வாரம் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து டெல்லியில் 700 பேர் காணவில்லை.

டெல்லியின் நிலைமை பரிதாபகரமானது. உடல்கள் குவியல்களாக உள்ளன. வன்முறையால் பலர் வீடற்றவர்களாக மாறிவிட்டனர். சாக்கடைகளில் இருந்து உடல்கள் மீட்கப்படுகின்றன. ஏழு நூறு பேரை காணவில்லை என கூறினார்.

Next Story