கொரோனா வைரஸ் விவகாரம் ; பாராளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று விளக்கம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று விளக்கம் அளிக்கிறார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 93 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் விவகாரம் பற்றி இன்று பாராளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் விளக்கம் அளிக்கிறார். மக்களவையில் நண்பகல் 12 மணிக்கும், மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கும் ஹர்ஷ்வர்த்தன் விளக்கம் அளிக்க உள்ளார்.
Related Tags :
Next Story